இந்தியா_VS_பாகிஸ்தான்

 


#இந்தியா_VS_பாகிஸ்தான் 

                   ஆய்வு: 14


இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் பெரிதாகாமல் தடுக்கப்பட்டது என்பது ஒரு வகையில் வரவேற்கத்தக்கது. இருப்பினும் பாகிஸ்தான் நாடு தீவிரவாதிகளின் புகலிடம் ஆகவும் தீவிரவாதத்தை வளர்த்தெடுப்பதில் முதன்மையாகவும் இருப்பதனால் அங்கு உள்ள பொதுமக்களே அங்குள்ள அரசாங்கத்தையும், ராணுவத்தையும் நம்பாமல் இந்திய ராணுவத்தையும், இந்திய அரசையும் நம்பி அவர்கள் நிலப் பகுதியில் அமைதி திரும்ப தீவிரவாதம் முற்றிலும் அழித்து ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலும் பாகிஸ்தான் என்ற நாட்டை இரண்டாக அல்லது மூன்றாக பிரித்து புதிய நாடுகளை உருவாக்க வேண்டும் என்ற கோஷம் தற்போது பாகிஸ்தான் முழுவதற்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.


இந்த பேச்சுவார்த்தை எனக்குப் புரியவில்லை.! பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவேண்டும் என்றால் அந்த 26 பேரை சுட்ட தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் அல்லது அவர்களுக்கும் அந்த தீவிரவாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இந்தியா ஒப்புக்கொள்ள வேண்டும். இது இரண்டில் ஏதாவது ஒன்று நடந்திருக்க வேண்டும். இது இரண்டுமே நடக்கவில்லை என்றால் அங்கும் இங்கும் நடப்பதுதான் என்ன? என்கிற சந்தேகம் எழுகிறது. ஏன் மக்களை குழம்புகிறார்கள்!?


எனினும் போரின் முடிவுபற்றி பேசிக்கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் போர் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் வந்து கொண்டிருப்பதாலும், இதில் உள்ள சூழ்ச்சி புரியாததாலும் மக்களை குழப்புவதில் மீடியா பெரும்பங்கு வகித்து வருகிறது. வீடியோகேம், சினிமா போன்ற காட்சிகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட காட்சிகளை மீடியாக்கள் இங்கே அரங்கேற்றுவது  மக்களை குழப்புகின்ற நிலையே! இதனை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.


போரை நிறுத்தி பேச்சு வார்த்தைக்கு வரத் தயாராகும் பாகிஸ்தான் 8500கோடி கடன் வாங்கியுள்ளது. போரை நிறுத்தும் இந்த நாடு மேலும் ஏன் கடன் வாங்குகிறது. அப்படியானால் போரை நிறுத்துவதாக ஒப்பந்தம் செய்துவிட்டு மீண்டும் தனது ராணுவத்தை பலமாக தயார் செய்து கொண்டு தாக்குவதற்கு ஆயத்தமாகிறார்கள் என்றுதானே அர்த்தம். சீனாவிடம் கடன் கேட்கும் அந்நாட்டின் நிலை பின்நாளில் வரும் வரலாறில் என்னவாகப் போகிறதோ!!!

ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பி அடைக்க இயலாத பாகிஸ்தான் மீண்டும் கடன் வாங்குவதைத் கண்டு அந்நாட்டு மக்களே அதிர்ச்சியாகி வருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இறைவனிடம் துவா கேட்பதாகவும் செய்தி வந்திருக்கிறது. 


ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பவர்கள், அந்நாட்டின் ஆயுத தளவாடங்களையும், பொருளாதாரத்தையும் மட்டுமே அழிக்க வேண்டும் என்பது விதி. அதை இந்தியா சரியாக கடைபிடிக்கிறது. எந்த மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள்ளும் இதுவரை குண்டுகள் முழக்கம் படவில்லை. ஆனால் பாகிஸ்தான் அந்த விதியை உடைத்து மக்கள் வசிக்கும் பகுதிக்குள் குண்டெறிப்பட்டது அந்த நாட்டின் வளர்ச்சியை கெடுத்துக் கொள்ளும் சோதனை காலமே!


4 நாட்களாக நடந்து வரும் இந்திய ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் விதமாக "அல்-புன்யான் "என்ற இராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதாக பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது, மேலும் அதன் ட்ரோன்கள் இந்திய தலைநகரான புதுதில்லியின் வான்வெளியில் ஊடுருவியதாகக் கூறுகிறது. 4 இந்திய ராணுவ தளங்கள் மீது குறுகிய தூர தரையிலிருந்து தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை நாங்கள் ஏவினோம் எனவும், பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.


பகவல்பூரில் இந்திய ராணுவம் தாக்கியதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவன் மெளலானா மசூத் எனும் தீவிரவாதி இறந்தான். அவனது சாவிற்கு பாகிஸ்தான் ராணுவமே சென்று மரியாதை செலுத்தியது. தீவிரவாதம் இல்லையென்று கூறுகின்ற பாகிஸ்தான் இந்த கூட்டத்தின் தலைவனான இவனது சாவிற்கு ராணுவ மரியாதை செய்தது எப்படி என்கிற கேள்வியும் இங்கே எழத்தான் செய்கிறது.


அதோடு, 

பாகிஸ்தானுக்கு சாதகமாக சிலர் பதிவிடுவது வருந்தத்தக்க செய்தி என்றாலும், அவர்களின் உண்மை உணர்வுகளை புரிந்து கொள்ள ஏதுவாக அமைகிறது அவர்களது பதிவும். 


நம் இந்திய ராணுவம், மக்கள் வசிக்கும் பகுதியினுள் இதுவரை குண்டுகளை போடவில்லை. அதை செய்யவும் வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த எண்ணம் இந்திய ராணுவத்திற்கு வராது. மனிதநேயம் மிக்க நாடு நம்நாடு. மனிதநேயம் போற்றும் நாடு நிச்சயமாக மானுடத்தை சாகடிக்காது.


ஆனாலும் மத்திய அரசு பாதுகாப்பு கருதி, இந்திய  எல்லைகளில் பாதுகாப்புக்கு ராணுவத்தை நிறுத்தி வைப்பது போல, மாநில அரசுகளும் தங்கள் கடற்கரையோர எல்லைகளான நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், கோட்டைப்பட்டினம், மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம்,கீழக்கரை  தொடர்ந்து ராமேஸ்வரம் வரையிலும் தமது பாதுகாப்பை அதிகப்படுத்தி, நகரங்களுக்குள் உள்ள மால், தியேட்டர், பெரிய மார்க்கெட்டுகள், ஜவுளிக்கடைகள் போன்ற வியாபார தளங்களில் காவல்துறைகளை நிறுத்தி பாதுகாப்பை உறுதி படுத்தினால் அரசு இந்த தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தலாம். அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் தங்கள் மாநில கடற்கரையோரங்களில் இந்த பாதுகாப்பினைத் தொடர வேண்டும்.


எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. போர் என்றாலே இருநாடுகளுமே பொருளாதார வீழ்ச்சி அடையும். ஆனால் இந்தியாவுக்கு 10% என்றால் பாகிஸ்தானுக்கு 30% வீழ்ச்சி அடையும். அதை புரிந்து நடந்து கொண்டால் பாகிஸ்தான் பிழைக்கும்.‌ இல்லையேல் நாளைய வரலாறில் பாகிஸ்தான் கேள்விக்குறியே!!!


✒️ மதுக்கூர். சோலை ராஜகுமாரன் 

"Ottern Times Reporter "

2/Post a Comment/Comments

  1. தங்களுடைய கட்டுரை உணர்ச்சி பூர்வமாக உள்ளது வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி மிக்க நன்றி

      Delete

Post a Comment