#சாதி_வாரிய_கணக்கெடுப்பு ஆய்வு :13
" இன்றைய நாளில் அனைத்து மருத்துவ உறவுகளுக்கும், மற்றும் மருத்துவ தோழமைகள் அனைவருக்கும்
என் இதயப்பூர்வமான வாழ்த்துக்களைக்கூறி மகிழ்கின்றேன்.
அரசின் தற்போதைய சாதி வாரிய கணக்கெடுப்பு கொண்டு வருவதற்கான காரணம் என்ன?
அப்படி கொண்டு வந்தால் அதில் மக்களின் நன்மை தீமை என்ன!?
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிகள்
--------------------------------------
மக்கள் தொகை கணக்கெடுப்பு உலகில் முதன்முதல் சுவிடன்(Sweden) நாட்டில் 1749-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
உலக மக்கள் தொகை நாள் ஜூலை 11 ஆகும். 1987 முதல் இது அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-இல் தொடங்கப்பட்டது. இது முழுமையான கணக்கெடுப்பாக அமையவில்லை. 1881-ஆம் ஆண்டு நடந்த மக்கள் தொகை
கணக்கெடுப்பு முழுமையாக நடத்தப்பட்ட முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பட்டு வருகிறது.
1931-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் சாதி அடிப்படையில் இறுதிகணக்கெடுப்பாகும்.
மண்டல் ஆணையம் 1931-ஆம் ஆண்டு கணக்கெடுப்பையே தனது அடிப்படையாகக் கொண்டது. 52% பிற்பட்டவர்கள் எனும் (OBC).
மண்டல் ஆணையம் 1978-ஆம் அமைக்கப்பட்டது.1980-இல் அறிக்கை கொடுக்கட்டது.1990-ஆம் ஆண்டு V.P சிங் தலைமையிலான அமைச்சரவை அந்த அறிக்கையை செயல் படுத்தி ஒன்றிய அரசு வேலைவாய்ப்பில் 27%
இட ஒதிக்கீட்டை பிற்பட்டோருக்கு(OBC) வழங்கியது.
2006-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோருக்கு(OBC) 27% இடஒதிக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு வழங்கும் 27%இட ஒதுக்கீடு மக்கள் தொகை அடிப்படையில் அமைந்தது அல்ல.
சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இப்பொழுதுதான் ஒன்றிய அரசு அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.
(Info: Athi. Velayutham chidambaram advocate)
தற்போதைய சாதிய வாரிய கணக்கெடுப்பில் அரசுக்கும் மக்களுக்குமான நன்மை தீமைகள் என்னவென்று பார்த்தால், மிகவும் குறைந்த மக்கள்தொகை கொண்ட மருத்துவ சமுதாயம், வண்ணார் சமுதாயம், நரிக்குறவர் சமுதாயம் போன்ற, குறைந்த பட்ச மக்கள் தொகையைக் கொண்ட சமுதாயங்களே பெரிதும் பாதிப்புக்குள்ளாவார்கள்.
ஏனெனில் அதிகார சமூகமாக பலர் அரசின் நாற்காலியை ஆளுமை செய்து கொண்டிருக்க மக்கள்தொகை குறைந்த இடத்திலுள்ள இதர சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற நீதி இருக்கும் தருவாயில், ஆதிக்க சாதிகளின் நெருக்கத்தால் அவர்களுக்கு சாதகமாகவே அரசு செயல்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இப்போதும் அப்படித்தானே உள்ளது.
பள்ளிக்கூடத்தில் சாதியில்லை; பாடத்திட்டத்தில் சாதியில்லை. ஆனால் பள்ளியில் சேரும் போதே சாதியை கேட்டுக் கொண்டுதான் சேர்க்கிறார்கள். இது எந்த வகையான அரசியல் கபளீகரம் என்று தெரியவில்லை. சாதியை ஒழிக்க நினைப்பவர்கள் புத்தகத்தில் மட்டுமாக அல்லாமல், மாணவர்களை சேர்க்கும் தருவாயிலும் அதை தவிர்த்தால் சாதிகள் ஒழியும்.
அதை தவிர்த்து சாதிய அடிப்படையில் கணக்கெடுத்தால் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று நம்பி அதனை ஏற்பவர்களுக்கு நிச்சயமாக ஒரு ஏமாற்றம் காத்திருக்கும்.
நிச்சயமாக இதனால் மக்களுக்கு பெரிய நன்மை ஏதுமில்லை. இது ஒருவகை அரசியலே!
ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலும், பீகார், குஜராத் போன்ற மாநிலங்களிலும் குறிப்பிட்ட ஒரு சாரரே அதிகமாக உள்ளனர். அவர்களின் ஓட்டு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கான சலுகைகள் உடனடியாக கிடைக்குமா! இல்லை பட்டியலிட்டதின்படி சலுகைகளை குறைந்த சாதி கணக்கெடுப்பு உள்ளவர்களுக்கும் கொடுப்பார்களா!? அவர்களுக்கு ஓட்டு முக்கியமா!? இல்ல நம்பிக்கையான நல்லாட்சி முக்கியமா!?இதுவரை நடந்த ஆட்சிகளை வைத்து இந்த கருத்தினை ஆராய்ந்து கொள்ளுங்கள்.
உதாரணமாக ஆதிதிராவிடர், வன்னியர், முத்தரையர், முக்குலத்தோர் என பட்டியலிட்டு பார்ப்போம்.
அந்த கணக்கெடுப்பு பட்டியலின் படி இந்த சாதிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். அப்படியெனில் குறைந்த அளவு மக்கள்தொகை கொண்டவர்களுக்குத்தான் அதிகபட்ச இட ஒதுக்கீடு ஒத்துக்கப்பட வேண்டும். இது குறைந்தளவு மக்கள்தொகை கொண்ட சாதிய மக்களுக்கு கிடைத்து விடுமா!
தற்போது கேட்ட 5% கிடைப்பதற்கே வாய்ப்பு இல்லாத போது, வரப்போகிற பட்டியலில் மேற்கூறிய மருத்துவர், வண்ணார், குறவர்,நரிக்குறவர், மலைவாழ் மக்கள், பழங்குடியினர் என சில சாதிகள் குறைந்தபட்ச மக்கள் தொகையாக வருகிறது. அப்படியெனில் நமக்கு அதிகமான இட ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றால் இதனை நாம் ஏற்கலாம்.
சாதிய விளம்பர பலகைகளும், சாதிய தெருப் பெயர்களும் நீக்கப்பட்டு விட்டால் சாதி ஒழிந்து விடும் என்று நினைக்கின்ற அரசுகள், சாதிய பெயருடைய பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் பெயரையும், சாதிய சங்கங்களையும், கட்டடங்களையும், பேனர்களையும், வாகனத்தில் ஒட்டப்படும் சாதிய குறிகளையும் எப்படி வளர்க்கிறது என்பதையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இந்த சாதிய கணக்கெடுப்பின் மூலமாக அரசு மீண்டும் பெரிய தவறை செய்ய காத்திருக்கிறதே தவிர, இதனால் மக்களுக்கு எந்த பலனும் ஏற்படப்போவது இல்லை. கொங்கு மாவட்டங்களில் அவரது பெரும்பான்மையும், சேர,சோழ மாவட்டங்களில் அவரது பெரும்பான்மையையும் காட்டி அரசுக்கு மீண்டும் ஒரு தலைவலி ஏற்படுத்தத்தான் போகிறதே தவிர, நன்மை என்று இதில் ஒரு பயனும் இல்லை.
அரசியல் ஆதாயங்களுக்காக அரங்கேற்றப்படும் இச்சட்டம், வெற்றியை ருசிக்கின்ற தருணங்களில் சாதிய அமைப்புகளுக்கு சட்டங்களும், அரசும் வளைந்து கொடுக்க வேண்டிய நிர்பந்தங்களை உண்டாக்கும். நன்கு யோசித்து பாருங்கள்.
பெரும்பான்மையாய் உள்ள மாவட்டங்கள் அவரது சாதிய அமைப்பின் வலிமையைக் காட்டி அவரவருக்கு தேவையான சலுகைகளை பெற முடியும். குறைந்த மக்கள் தொகை உடையவர்களின் குரல்வளை நெறிக்கப்பட்டு அக்குரல் அரசுக்கு கேட்க வாய்ப்பு வாய்ப்பே இல்லை.
ஒன்றிய அரசு ஏற்படுத்தி இருக்கும் இந்த சாதிய கணக்கெடுப்பு, CAA, NRC போன்ற பிரிவுகளின் கீழ் மீண்டும் மக்களிடையே ஒரு பிளவை ஏற்படுத்தவே முயற்சிக்கிறது என்பதை நாம் அறியலாம். இதனால் கிருத்துவ, இசுலாமிய குடியுரிமைகள் ரத்து செய்யப்படலாம். சாதி,சமய ஒற்றுமை வேரறுக்கப்பட்டு மீண்டும் வன்முறைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
சிறுபான்மை இனத்தவர்களை இந்த கணக்கெடுப்பின் மூலம் அடையாளம் கண்டு, அவர்களுக்கு குறைந்தபட்ச 4% விகித இட ஒதுக்கீட்டையாவது வழங்க அரசு செவிசாய்க்க வேண்டும். தமிழ்நாட்டில் மருத்துவ சமூகத்தின் தொகையாக சுமார் 30,00,000. பேர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பழங்குடியினர் 2001-ன் கணக்குப்படி, 3.5% பேர் வாழ்கிறார்கள் .ஆனால் மற்ற சமூகத்தினரின் எண்ணிக்கை பெருமளவில் இருப்பதால் அவர்களுடன் போட்டியிட்டு வெல்வது அவ்வளவு எளிதானதல்ல! அப்படி இருக்க இந்த சாதிய கணக்கெடுப்பு கண்துடைப்பாக இல்லாமல், உண்மையில் நலிந்தோராக இருக்கும் குறைந்தபட்ச மக்கள்தொகை கொண்ட சமூகத்தினருக்கு போதிய இட ஒதுக்கீட்டை வழங்கினால் இந்த "சாதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு" ஏற்புடையவையே.
✒️கவிஞர். மதுக்கூர் சோலை ராஜகுமாரன்

Post a Comment