The Road Show விஜய் பரப்புரை சோகம் நிறைந்த நகரமாக மாறிய கரூர்

 


#விஜய்_பரப்புரை_கரூர்.

The Road Show பரப்புரை நிகழ்ச்சியில்_ பலி:40 வீதம்- காயம்பட்டவர்களின் எண்ணிக்கை சரியான விகிதத்தில் இல்லை. ஆனாலும் இந்நிகழ்வின் மொத்தப்பலியும் ஒருவர் மேல் திரும்பியுள்ளது. ஆச்சரியப்பட வைக்கிறது!

ஒரு நிகழ்ச்சி என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும். அதற்கேற்ப பாதுகாப்பு முறைமைகளும், சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம். அந்த ஒழுங்கு முறையில் தவெக தலைமைக்கு அடுத்து முதன்மை பெறுவது காவல்துறையே.  நிகழ்ச்சியின் தலைமையர்கள் காவல்துறையிடம் தங்களது ஒப்புதலை பெறும் போதே இந்த இடம் வேண்டாம். போக்குவரத்து அதிகமாகவும், மிகக்குறுகிய இடமாகவும் உள்ளதாக வேண்டுகோள் வைத்துள்ளனர். அதை ஏற்காமல் அந்த இடத்தையே தீர்மானித்த காவல்துறையிடமே முதல் தவறு உள்ளது.  

தவெக தேர்வு செய்த அந்த மைதானத்தை இவர்களுக்கு ஒதுக்கித் தராதது ஏன் என்கிற கேள்விக்கு முன்_ இதற்கு முன்பே நடந்த பரப்புரை நிகழ்ச்சியில் இதைப் போன்றே கேட்ட இடத்தை கொடுக்காததும், போதிய காவல்துறை பாதுகாப்பு இல்லாததும் நம்மால் அறியப்பெற்ற ஒரு விடயமே. அப்படியானால் இந்நிகழ்வுக்கு முழுப்பொறுப்பு யார் ஏற்க வேண்டும்!!?

கரூரில்- 10,000 பேருக்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் வந்தது 27,000பேர் என்று காவல்துறை கணக்கு சொல்கிறது. அப்படியெனில் உளவுத்துறை அங்கு என்ன செய்கிறது!? உளவுத்துறையின் வேலைதான் என்ன!? மக்கள் அதிகமாக கூடும் என்பது தெரிந்திருந்தும் வெறும் 500 பேரை அங்கு காவல்துறை பணியில் அமர்த்தியதின் நோக்கம்தான் என்ன? இதற்கான பதிலை டிஎஸ்பி அவர்கள் பத்திரிக்கையாளர்களின் சொல்லாமல் மழுப்பும் ரகசியம் தான் என்ன!?

விஜய் கேட்ட இடம் தனி மைதானம். அதற்கு அனுமதி கொடுத்திருக்கலாம். இது வீம்பாகவே அனுமதி மறுக்கப்பட்டு இந்த "ரோடு ஷோ " வுக்கு அனுமதி வழங்கியதாக தெரிகிறது. இதில் அரசின் வன்மமும் தெரிகிறது.

மக்கள்தொகை 10,000 க்கு 500 பேர்தான் காவலர் எனில் 27,000 பேருக்கு எத்தனை காவலர்கள் போட வேண்டும். அதை மறுத்தது ஏன்? இந்த கேள்விக்கு டிஎஸ்பியிடம் பதிலில்லை. பதிலாக பத்திரிக்கையாளர் முறைக்கப்படுகிறார். அப்படியெனில் 

 தவறு எங்கு உள்ளது. 

ஒரு அரசியல்வாதி வந்தாலே கூட்டம் கட்டுக்கடங்காது. இவர் முண்ணனி நடிகர். கடந்த சில கூட்டங்களில் இவர் அனுமதி வாங்கியது 500 பேர். ஆனால் வந்தது 20,000 பேர். இது காவல்துறை அறியும். அப்படியிருக்க இதில் நடவடிக்கைகள் எடுக்க தவறியது யார்? காவல்துறையும், அரசும்தான். மற்ற பெரிய கட்சிகளின் நிகழ்விற்கு பாதுகாப்பை அதிகப்படுத்தும் காவல்துறை இதற்கு குறைவான அளவில் காவலர்களை அனுப்பியதின் பிண்ணனி தான் என்ன!? அப்படியெனில் இந்த சதிவேலை திட்டமிட்டே துவங்கப்பட்டதா என்கிற கேள்வியும் தற்போது எழுகிறது.

எத்தனை முறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலும் இந்த முட்டாள் ரசிகர்களும், மக்களும் திருந்தப்போவதும் இல்லை. அனுபவிக்கட்டும்.

எவ்வளவு உயிர் போனாலும் அதனை பணம் எனும் பொருள் மீட்டிடவா போகுது. எல்லாம் காலக்கொடுமை.

இதில் கவனிக்கத்தக்க சில விடயங்களும் உள்ளன...

ஆம்புலன்ஸ் வந்த பத்து நிமிஷத்துல அமைச்சர் வருகிறார்.

அறிக்கையும் தயாராக வருது.

மெரினா ப்ளைட்ஷோவும், கள்ளக்குறிச்சி இறப்புக்கும் கூட இரண்டுநாள் கழிச்சு தான் அறிக்கை வந்தது. ஆனால் இதுக்கு தயார் செய்து வைத்தமாதிரியே அறிக்கை உடனேயே வருது...

ஒட்டு மொத்த ஆளுங்கட்சியும் பதறுது.

இந்த பிண அரசியல் எல்லாம் பகுத்தறிவாளர்களுக்கு புரியாமலா போகும்!

எந்த ஒரு நிகழ்வையும்  காவலர் மட்டும் முடிவு செய்வதல்ல. அந்த காவல்துறையின் உளவுத்துறைதான் முடிவு செய்யும். ஒரு பிரபல நடிகர் வரும்போது எத்தகைய கூட்டம் வருமென்பதை அனுமானிக்கத் தெரியாதது என்ன உளவுத்துறை. 

உளவுத்துறை நிச்சயமாக உண்மையை கூறி இருக்கும். அதனை அரசும் காவல்துறையும் ஏற்காததின் மர்மம் என்ன என்பது பலருடைய கேள்வி. அந்த கேள்விக்கான பதிலே நேற்று நடந்த கொலைகள். ஆம் இவை கொலைகள்தான்.

Road show என்பது என்ன?

அவைக்கு எத்தகைய பாதுகாப்பு அவசியம் என்பதை உணராத காவல்துறை மீதே தவறு உள்ளது. ஆனால் இவைகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை. ஊடகங்கள் மாற்றி மாற்றி இதே கேள்வியை வைக்கிறார்கள். ஆனால் பதிலில்லை..

எந்த பரப்புரையில்தான் கூட்டம் இல்லை. ஆனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். இது கலவரத்தை உண்டு பண்ணவே என்பது நடந்தது போலவே உள்ளது.

மீனவர்கள் படுகொலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு 13 பேர் படுகொலை, ஆந்திராவில் 20 தமிழர்கள்

சுட்டுப் படுகொலை. கள்ளச்சாராயம் குடித்து 50 இறப்பு, இப்படி தினம் தினம் பல்லாயிரம் மக்கள் இறந்தப்போது ஒரு துளிக் கண்ணீர் கூட சிந்தாத சில அமைச்சர்கள் இன்று கண்ணில் நீர் வராமலேயே கதறி அழுதது வேடிக்கையிலும் வேடிக்கைதான்.

ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நிகழ்வு என்றால் அதன் அமைப்பாளர் சரியாக திட்டங்களை வகுக்கனும். இரண்டாவது காவல்துறை அதற்கேற்ற பாதுகாப்பைத் தரனும். அரசும் இவர்கள் கேட்கும் பாதுகாப்பை உறுதிபடுத்தனும்.  ஏனெனில் இவர்கள் பாதுகாப்பு தருவது தலைவனுக்கு அல்ல; மக்களுக்கு. அந்த மக்களை கொன்றுவிட்டு எவனை ஆளப்போகிறீர்கள்!?

இந்த முட்டாள் ரசிகர்களும், பெதுமக்களும் முதலில் தங்களை மாற்றிக் கொள்ளனும். தொலைக்காட்சியை விடவா நேரில் நாம் தெளிவாக கண்டுவிடப்போகிறோம்.

எதை சாதிக்க இத்தனை உயிர்பலி!

 இனியாவது திருந்துங்கள் மக்களே. ஒரு நடிகரை நடிகனாக பாருங்கள். ஒரு தலைவனை தலைவனாக மட்டும் பாருங்கள். அவன் உங்கள் உறவல்ல; உயிரல்ல. அவன் வாழ்க்கை வேறு. உங்கள் வாழ்க்கை வேறு.  உயரே பறப்பதெல்லாம் பருந்தல்ல. நீங்கள் ஊர்க்குருவிதான் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

✒️மதுக்கூர்.சோலை ராஜகுமாரன் 

கவிஞர்/ தமிழ் எழுத்தாளர்/ பத்திரிக்கையாளர் #கரூர் #karur

#முக்கிய_குறிப்பு_கவனிக்க :

#மஜக_சார்பில்_இரத்ததான_சேவைக்கு_அவசர_ஏற்பாடு…

....................................

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது தொடர்பாக அரசு எடுக்கக் கூடிய அனைத்து விரைவான நடவடிக்கைகளுக்கும் எல்லோரும் துணை நிற்போம்.

தற்போது காயமடைந்தவர்களுக்கு தேவையான இரத்ததான உதவிகளை செய்வதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் இஸ்மாயில் (9894371374) அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

உதவி தேவைப்படுவோர் அவரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

இரவு முழுதும் மஜக - மருத்துவ சேவை அணியினர் இதில் முழுமூச்சாக களமிறங்கி பணியாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

#மனிதநேய_ஜனநாயக்கட்சி


0/Post a Comment/Comments