அறம் வளர்த்த ஔவை
அழகிய தமிழினில்
ஆத்திசூடி பகர்ந்தவள்
இலக்கிய நூல்களில்
இரண்டறக் கலந்தவள்
ஈடில்லா தமிழதை
இமயம் தாெடச் செய்தவள்
நன்னெறிப் பாடலை
நயமுடன் காெடுத்தவள்
பாரியின் மகளிரை
பாங்குடன் காத்தவள்
அகப்புறப் பாடலில்
அகலாது நிறைந்தவள்
உன்னத பெண்ணென
உலகினில் நிலைத்தவள்
ஊக்கம் உயர்வென
உறுதியாய் உரைத்தவள்
ஆறுவது சினம் கூறுவது
தமிழ் அறியாத சிறுவனா
என தமிழ்க்கடவுள்
முருகனிடம் அன்பாய்
வினவியவள் இவள்
அவர் சினம் தனித்த
தங்க தாரகையிவள்
காென்றை வேந்தனை
கொடுத்திட்ட தாயிவள்
அதியமான் அன்பினில்
நெல்லிக்கனி பெற்றிட்ட
கன்னிப் பெண்ணிவள்
கலங்கரை விளக்கமிவள்
அரசர்கள் வணங்கிடும்
அன்புள்ளம் காெண்டவள்
மதியினில் ஔிர்வதாய்
மழலையர் காண்பவள்
மாண்புடன் பாேற்றிட
புவிதனில் உதித்தவள்
அறம் வளர்த்த அன்பான
அன்னை இவள்
அள்ளஅள்ள குறையா
தமிழ் அமுதிவள்
ஔவை என்னும் பெயருடயை
தெய்வீகப் பெண்ணிவள்
♥ரேணுகா ஸ்டாலின்♥

Semma
ReplyDeleteThank you so much
DeletePost a Comment